கோபி தாலுகா தேவர் பேரவை சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது குருபூஜை ஜெயந்தி விழா மெரடச்சூரில் கொண்டாடப்பட்டது, இந்த விழாவிற்கு பேரவையின் தலைவர் எம்.என்.நாகராஜ தேவர் தலைமை தாங்கினார். செயலாளர் தங்கராஜ் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே .ஏ செங்கோட்டையன் கலந்து கொண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் .தொடர்ந்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார் .

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி சத்திய பாமா, கோபி ஒன்றிய குழு தலைவர் மெளத்தீஸ்வரன் ,கோபி நகர செயலாளர் பிரினியேர கணேஷ் மற்றும் பேரவை நிர்வாகிகள், பெருமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் தேவர் பேரவை செயலாளர் ஜி.கே செந்தில் குமார் நன்றி கூறினார்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நம்பியூர் தாலுக்கா செய்தியாளர் அஜித்.

No comments:
Post a Comment