ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், உக்கரம் ஊராட்சி வண்டிப்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் 2021-2022 ஆதரவு ஊக்கத்தொகை மற்றும் போனஸ் வழங்கும் விழா நடைபெற்றது. சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவரும், சத்தி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி.இளங்கோ கலந்துகொண்டு உறுப்பினர்களுக்கு போனஸ் வழங்கினார்.

உடன் உக்கரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகேஷ், ஒன்றிய குழு உறுப்பினர் சரோஜா செந்தில், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் சுப்பிரமணியம், துணைத் தலைவர் சண்முக சாமி மற்றும் திமுக நிர்வாகிகள் ராம் கருணாநிதி, செந்தில்குமார், முருகேஷ், வெள்ளிங்கிரி மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment