ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பவானி பசுவேஸ்வரர் வீதி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 19 December 2022

ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பவானி பசுவேஸ்வரர் வீதி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.


ஈரோடு மாவட்டம் பவானி பசுவேஸ்வரர் வீதி மற்றும் ஐங்கமர் வீதி சேர்ந்த பொதுமக்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் இன்று (19/12/2022) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு  அளித்தனர்.


மனுவில் அப்பொதுமக்கள் மக்கள் கூறியதாவது; பவானி பசுவீஸ்வரர் வீதி மற்றும் ஐங்கமர் வீதியை சேர்ந்த நாங்கள் ஆற்றோரமாக சுமார் 01 தலைமுறை தாண்டி வசித்து வருகிறோம் இந்நிலையில் பவானி காவிரி ஆற்றில் சில சமயம் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது அதனால் எங்கள் பாதுகாப்பை கருதி அரசு அதிகாரிகள் எங்களை அங்கிருந்து இடம்பெயர்ந்து காலி செய்து அடுக்குமாடி குடியிருப்புக்கு குடியேற சொல்கிறார்கள்.


ஆனால் அவர்கள் கூறும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றாள் எங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும், அதிகாரிகள் கூறும் வகையில் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றால் எங்களின் அவசர தேவைக்கு தொலைதூரம் செல்ல வேண்டி இருக்கிறது பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், அவசர தேவைகளுக்கு மருத்துவமனை செல்ல  சுமார் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் ஆகிறது  இதனால் எங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.


ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்தபோது வீடு இடிந்தோ, உயிர் சேதமோ எதுவும் நடைபெறவில்லை இனிமேல் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்தால் அதிகாரிகளை நாங்கள் எதுவும் தொந்தரவு செய்யப் போவதில்லை  அப்படியே ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்தால் அரசு சார்பாக எந்த ஒரு நிவாரணமும் எங்களுக்கு வழங்க வேண்டாம், ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்தால்  இரண்டு அல்லது மூன்று நாட்களில் தண்ணீர் வடிந்து விடுகிறது, அதனால் இங்கேயே எங்களது வாழ்வாதாரத்தை தொடர வழி வகுத்து தருமாறு அப்பகுதி பொதுமக்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

No comments:

Post a Comment