இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலை வேப்பம்பாளையம் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் 1365 மகளிர் குழுக்களை சார்ந்த 17021 உறுப்பினர்களுக்கு ரூ.53.75 கோடி மதிப்பிலான கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி இ.ஆ.ப. வழங்கினார்.
உடன் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி, ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி, மாநகராட்சி துணை மேயர் வெ.செல்வராஜ், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) கெட்சி லீமா அமலினி ஆகியோர் உடன் இருந்தனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment