சங்கராண்டாபாளையம் பட்டக்காரர் அரண்மனை பொன் துரி எனும் பொன் ஊஞ்சல் விழா கொங்கு மக்களின் பெருந்திருவிழாவாக நடைபெற்று வருகிறது. இந்த விழா இரண்டாம் கரிகால் சோழ மன்னன் தனக்கு போரில் உதவிய மருமகன் ஆட்டான், அத்தி, என்ற சேர மன்னனை கருவூரில் அரியணை ஏற்ற உதவிய பெரியகுளம் வேணாடார் பரம்பரை, கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பிரதிநிதியாக சங்கராண்ட பாளையம் அரண்மனை பட்டக்காரருக்கு சோழன் தன் மகள் ஆடிய பொந்துரியை (பொன்னூஞ்சல்) வேணாட்டாருக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரிசாக அளித்தார்.
இன்றும் அந்த ஊஞ்சலில் பெரிய குல தலை பெண் குழந்தைகளை வைத்து புலவர்கள் பாட்டு பாட பட்டக்காரர் பரம்பரையினர் பொன்னூஞ்சல் ஆட்டுவார்கள். இந்தப் பொன் ஊஞ்சல் ஆடுவதால் சோழனை காண்கிறோம் என கொங்கு மக்கள் பெருமை கொள்கிறார்கள்.
No comments:
Post a Comment