ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளி பகுதி யில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற் பனை செய்யப்படுவதாக புஞ்சை புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீசார் புங்கம்பள்ளி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட போது அப்பகுதியில் உள்ள பாபு (53) என்பவரது மளிகை கடையில் குட்கா பொருட் கள் விற்பனை செய்ததை கண்டுபிடித்த போலீசார் கடையை சோதனையிட்ட னார். அப்போது கடைக் குள் இருந்த பல்வேறு வகை யான தடை செய்யப்பட்ட 10.50 கிலோ எடையுள்ள கைதான பாபு, வேலுச்சாமி குட்கா பொருட்களை பறி முதல் செய்தனர்.
இது தொடர்பான விசாரணையில் பாபுவின் மளிகை கடைக்கு புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி (68), சத்தியமங் கலத்தைச் சேர்ந்த கோபி ஆகிய இருவரும் குட்கா சப்ளை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீ சார் பாபு, வேலுச்சாமி இருவரை கைது செய்தனர். தலைமறைவான கோபியை போலீசார் தேடி வருகின்றனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment