அறம் அறக்கட்டளை சார்பாக மருத்துவ மாணவிக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 January 2023

அறம் அறக்கட்டளை சார்பாக மருத்துவ மாணவிக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.


ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஒன்றியம், சிவகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி  சங்கீதா நீட் தேர்வில்  தேர்ச்சி பெற்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார். இவரைப் பாராட்டி அறம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் அறம் கிருத்திகா சிவ்குமார் அவர்கள் மூலம் வழங்கப்பட்ட ரூ.40,000/- மதிப்பில்லான மடிக்கணினியை(Laptop) மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி  மாணவிக்கு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் கொடுமுடி மேற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் கொந்தளம் பாலகிருஷ்ணன், சிவகிரி இரண்டாவது வார்டு கவுன்சிலர் கார்த்தி, ஆட்டோ வேலு, கொரடா சங்கர் மற்றும் நிர்வாகிகள், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் குழு உறுப்பினர்களும், ஆசிரிய பெருமக்கள் மற்றும் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.


- தமிழக குரல்  இணையதள செய்திகளுக்காக பூபாலன் 

No comments:

Post a Comment