ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டியில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோபிசெட்டிபாளையம் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசியதாவது. சில பேர் நினைக்கிறார்கள் நமக்கு இரட்டை இலை கிடைக்குமா கிடைக்காது என. நிச்சயமாக இரட்டை இலை சின்னம் நூறு சதவீதம் நமக்கு தான். 28 ஆம் தேதிக்குள் சாதகமாக தீர்ப்பு வரும். கோபிசெட்டிபாளையத்தில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த புகழேந்தி பேட்டி கொடுக்கிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக எடப்பாடி அணி போட்டியிட்டால் டெபாசிட் கூட கிடைக்காது என பேசியுள்ளார். இவருக்கு தமிழ்நாட்டில் ஓட்டு இல்லை. கர்நாடக மாநிலத்தில் புகழேந்தி தேர்தலில் போட்டியிட்டபோது அவர் டெபாசிட் கூட வாங்கவில்லை. அதை நினைவில் வைத்து பேசுகிறார் என ஓபிஎஸ் அணியினர் மீது கடுமையாக தாக்கி பேசினார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.
அதிமுக புஞ்சை புளியம்பட்டி நகர கழகத்தின் சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பவானிசாகர் தொகுதி எம்எல்ஏ பண்ணாரி தலைமை தாங்கினார். புஞ்சை புளியம்பட்டி நகர கழக செயலாளர் ஜி.கே.மூர்த்தி வரவேற்புரையாற்றினார்.இக்கூட்டத்தில் கோபி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங் கோட்டையன் பேசினார். முன்னாள் எம்எல்ஏ. ஈஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.காளியப்பன் இதில் ஒன்றிய செயலாளர்கள் பவானிசாகர் தெற்கு வி.ஏ. பழனிச்சாமி, பவானிசாகர் வடக்கு டி.எஸ்.பழனிச்சாமி, சத்தியமங்கலம் தெற்கு என்.என்.சிவராஜ், சத்தியமங்கலம் வடக்கு சி.என்.மாரப்பன், சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.எம்.எஸ்.நாச்சிமுத்து, சத்தி நகர செயலாளர் ஓ.எம்.சுப்பிரமணியம், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் வி.பி. தமிழ்செல்வி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.ஆர்.பி.வெங்கிடுசாமி, தாளவாடி ஒன்றிய செயலாளர் சதீஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment