ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழைய பாலம் இடிப்பு, - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 27 January 2023

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழைய பாலம் இடிப்பு,


ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகர் பகுதியில் நடுவில் ஓடும் பவானி ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழைய பாலம் உள்ளது. சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது வாகன போக்குவரத்து அதிகரிப்பின் காரணமாக பவானி ஆற்றின் குறுக்கே உள்ள பழமை வாய்ந்த பாலத்தை இடித்து விட்டு 11 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் கட்டுவதற்காக டெண்டர் விடப்பட்டு தற்போது பழைய பாலத்தை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆர்ச் வடிவில் கட்டப்பட்ட பழைய பாலத்தை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இயந்திரத்தின் மூலம் பாலத்தை இடிக்கும் போது பாலத்தின் ஒரு பகுதி இடிந்து பவானி ஆற்றிற்குள் விழுந்ததில் ஆற்று நீர் சிதறியது. இரும்பு கம்பிகள் பயன்படுத்தாமல் கருங்கற்கள் மற்றும் செங்கற்களை பயன்படுத்தி கட்டப்பட்ட பழைய பாலம் இடிப்பதை வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.  


பழைய பாலம் முழுவதும் இடிக்கப்பட்ட பின் புதிய பாலம் கட்டுமான பணி தொடங்கும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி 

No comments:

Post a Comment