ஈரோட்டில் வரும் 22 ஆம் தேதி சர்வதேச பூனை கண்காட்சி ; - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 14 October 2023

ஈரோட்டில் வரும் 22 ஆம் தேதி சர்வதேச பூனை கண்காட்சி ;

 

ஈரோட்டில் வரும் 22 ஆம் தேதி சர்வதேச பூனை கண்காட்சி ;

ஹுரைரா கேட் பான்சியர்ஸ் மற்றும் கேட் கிளப் ஆப் இந்தியா இணைந்து நடத்தும் முதல் சர்வதேச பூனை கண்காட்சி ஹுரைரா கேட் ஷோ வருகின்ற 22 ஆம் தேதி ஈரோடு செட்டிபாளையத்தில் அமைந்து இருக்கும் AM மஹாலில் காலை 9மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது.

ஹுரைரா கேட் ஷோவின் முக்கிய அம்சமாக சுமார் 200 பூனைகள் போட்டியில் பங்கு பெற உள்ளன. போட்டியில் கலந்துக் கொள்ள தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலத்தில் இருந்து பூனை பெற்றோர்கள் பூனைகளுடன் கலந்து கொள்ள உள்ளார்கள். அதில் குறிப்பாக நமது இந்தியா வம்சாவளி சார்ந்த இண்டிமோ பூனை, ட்ரெடிஷனல் லாங் ஹேர் பூனை ஹிமாலயன் பூனை, பெங்கால் பூனை, மெய்ன் கூன் பூனை, சியாமிஸ் பூனை பர்சியன் பூனை, பிரிட்டிஷ் ஷார்ட் ஹேர் பூனை மற்றும் அயல்நாட்டு பூனை வகைகள் கண்காட்சிக்கு வரவுள்ளது குறிப்பிட்டத்தக்கது.


மேலும் இந்த நிகழ்ச்சியை காண வரும் பள்ளி குழந்தைகளுக்கு இலவச நுழைவு மற்றும் வண்ண மீன் வழங்க உள்ளனர், ஈரோடு சுஹானி வெட்னரி ஹாஸ்பிடல் சார்பாக அனைத்து வகையான நாய்கள் மற்றும் நாட்டு பூனைகளுக்கு முன்பதிவின் மூலம் இலவச தடுப்பூசி முகாம் மற்றும் இலவச பரிசோதனை நடத்த உள்ளனர்.


இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து பூனைகளுக்கும் இன சான்றிதழ், மைக்ரோ சிப்பிங், அது மட்டுமின்றி வெற்றி பெறும் முதல் பத்து பூனைகளுக்கு தலா 10,000/ பத்தாயிரம் மதிப்பிலான பரிசு பொருட்கள் அடுத்து வரும் இருபது பூனைகளுக்கு தலா 2 ஆயிரம் மதிப்பிலான பரிசு பொருட்கள் மற்றும் கோப்பைகள் என பல்வேறு அம்சங்களுடன் பூனை கண்காட்சி மற்றும் சாம்பியன் ஷோ நடைபெற உள்ளதாக ஹுரைரா கேட் பான்சிர்ஸ் தமிழ்நாடு அமைப்பின் தலைவர் திரு.முகமது ரப்பானி அவர்கள் கூறினார். மேலும் இப்போட்டிக்கான விவரத்திற்கு hcf.tamilnadu@gmail.com என்னும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் ச.சக்திவேல் மற்றும் ஈரோடு மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment