எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு பாராளுமன்ற தேர்தல் பணிக்குழு தேர்வு! - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 8 March 2024

எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு பாராளுமன்ற தேர்தல் பணிக்குழு தேர்வு!

 


எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு பாராளுமன்ற தேர்தல் பணிக்குழு தேர்வு!


எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட செயலகக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் தலைமையில் காவிரி ரோட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் எதிர்வரும்  மக்களவைத் தேர்தலுக்காக ஈரோடு பாராளுமன்ற தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது. 


அதனடிப்படையில் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழு தலைவராக ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம், பணிக்குழு செயலாளராக திருப்பூர் தெற்கு மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் தாராபுரம் J.சையது அபுதாஹிர், பணிக்குழு உறுப்பினர்களாக SDTU தொழிற்சங்கத்தின் மாநில பொருளாளர் ஜே.எம்.ஹசன் பாபு, SDPI ஈரோடு தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் குறிஞ்சி.பாஷா, ஈரோடு தெற்கு மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் மு.ஜமால்தீன், ஈரோடு தெற்கு மாவட்ட பொருளாளர் ம.ஃபர்கான் அஹமது, ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர்கள் க.முனாப், அ.சாகுல் ஹமீது, SDTU தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஆட்டோ S.அப்துல் ரகுமான், தொழிற்சங்க மாவட்ட துணைத்தலைவர் பள்ளிபாளையம் M.முகமது அலி, ஈரோடு கிழக்கு தொகுதி தலைவர் கேபிள் M.சபீர் அஹமது, தாராபுரம் தொகுதி தலைவர் A.அபுதாஹிர், காங்கேயம் தொகுதி தலைவர் M.S.ராஜா முஹம்மது இமாம், காங்கேயம் தொகுதி செயலாளர் D.மகபூப் பாஷா, கொடுமுடி தொகுதி பொறுப்பாளர் S.M.ஜியாவுதீன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


 தமிழக குரல் இணையதள செய்தியாளர் கோபால் ஈரோடு

No comments:

Post a Comment