நம்பியூர் வட்டார அளவில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு விழா!!! - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 May 2024

நம்பியூர் வட்டார அளவில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு விழா!!!




ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டார அளவில் அரசு பள்ளியில் முதல் மூன்று இடங்களை  பிடித்த மாணவிகளுக்கு நம்பியூர் திமுக ஒன்றிய செயலாளரும், நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல் செந்தில்குமார் சால்வை அணிவித்து கேடயம் வழங்கினார்.


நம்பியூர் வட்டார அளவில் மலையப் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மதுமிதா  571 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும்


இரண்டாம் இடத்தை கடத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பேபி ஷாலினி 562 மதிப்பெண்களும்,


மூன்றாம் இடத்தை நம்பியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கலைவாணி 559 மதிப்பெண்களும் பெற்று நம்பியூர் வட்டார அளவில் சாதனை படைத்தனர்.


மேலும் பட்டி மணியக்காரன் பாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றதற்கு கேடயத்தை பள்ளியின் தலைமை ஆசிரியர் அழகேசன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் சக்திவேல், கார்த்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.


நிகழ்ச்சியில் முருகசாமி,சுஜாதா, வெற்றிவேல், என்.சி.சண்முகம், உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment