மொடக்குறிச்சி வட்டம், பூந்துறை சேமூர் ஊராட்சி, அம்பேத்கர் நகரில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமாக ரூபாய் 1.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன சமுதாய கூடம் திறப்பு விழா நிகழ்வில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கு ஏற்றி வைத்தும் கட்டிடத்தினை திறந்து வைத்தார்.
நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் தங்க தமிழ்ச்செல்வன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள், உள்ளூர் பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். புதிதாக கட்டப்பட்ட நவீன சமுதாயக் கூடத்தில் தரைதளம் மற்றும் முதல் தளத்தில் அலுவலக அறை, வரவேற்பு அறை, சமையலறை, உணவருந்தும் அறை, வைப்பு அறை, மணமகன் மணமகள் அறை, கல்யாண மேடை, பார்வையாளர் அரங்கம், விருந்தினர் அறை என பல்வேறு வசதிகள் கொண்ட நவீன சமுதாய கூடமாக அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக
பூபாலன்
No comments:
Post a Comment