ஈரோட்டில் பரவலாக கடந்த இரண்டு தினங்களாக பலத்த மழை பெய்தது . நேற்றும் ( ஆகஸ்ட் 08 ) மழை விட்டபாடில்லை . இந்நிலையில் , வெளுத்து வாங்கிய மழையால் , ஈரோடு வ . உ . சி . , பூங்கா மைதானம் பகுதியில் அமைந்துள்ள நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்பட்டது . மழை பெய்யும்போதெல்லாம் இப்பிரச்சினை ஏற்படுவதாகவும் இதற்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய தீர்வு காணவேண்டுமென்று பொதுமக்களும் வியாபாரிகளும் கோருகின்றனர் .
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment