ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் , ஒவ்வொரு மாதமும் 3 ம் வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடந்து வருகிறது . இதன் மூலம் மாதந்தோறும் 100 க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர் . அதன்படி , தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 20 ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை , மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்க உள்ளது . வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வாயிலாக நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்பு முகாம் , வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது .
எனவே , ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும் , இம்முகாமின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது . மேலும் , விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 86754 12356 , 94990 55942 மற்றும் erodemegajobfair @ gmail . com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் . இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment