பட்டியலின மக்களுக்கு நிலம் வழங்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 September 2024

பட்டியலின மக்களுக்கு நிலம் வழங்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்



   ஈரோடு மாவட்டம்,அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தலித் விடுதலை இயக்கம் சார்பாக அந்தியூர் வட்டத்தில் பல்வேறு கிராமங்களில் பட்டியல்/பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலம்,பூமிதான நிலங்கள் ,நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிலங்களில் பட்டியல் அல்லாத பிற சாதியினர் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்க வலியுறுத்தியும்.


    குறிப்பாக, கடந்த 1996-ம் ஆண்டுகளில் அந்தியூர் வட்டத்தினைச் சார்ந்த மாத்தூர் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு நில குடியேற்ற சங்கம் மூலமாக 250 ஏக்கர் வழங்க பயனாளிகள் பட்டியல் வருவாய்த்துறையினரால்  இறுதி செய்யப்பட்டும் கடந்த 30 ஆண்டுகளாக நிலம் வழங்காததினை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

   இந்நிகழ்விற்கு தலித் விடுதலை இயக்கம் ஈரோடு மாவட்டச் செயலாளர் சசிகுமார் தலைமை தாங்கினார்,தலித் விடுதலை இயக்கத்தின் மேற்கு மண்டல அமைப்பாளர் சக்திவேல்,தலித் விடுதலை இயக்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளர் இளையராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அம்பேத்கர் மக்கள் மையம் தலைவர் சசிகுமார் வரவேற்புரையாற்றினார்,விடுதலை சிறுத்தைகள் கட்சி ஈரோடு மாவட்ட தொண்டரனி அமைப்பாளர் வெங்கடாச்சலம்   போராட்டத்தை துவக்கி வைத்தார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி ஈரோடு மாவட்ட நிலமீட்பு அணி அமைப்பாளர் செந்தில் கண்டனவுரையாற்றினார்,இறுதியாக தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச. கருப்பையா  நிறைவுரையாற்றினார், திராவிட எழுச்சிப் பேரவை தலைவர் நன்றியுரையாற்றினார்.

 கண்டண ஆர்ப்பாட்டத்தில் திரளாக பல்வேறு கிராமங்களிலிருந்து பெண்கள் பங்கேற்றனர்.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக பூபாலன் 

 .

No comments:

Post a Comment