ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தின் முன் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தினர் நேற்று(செப்.24) மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் புருசோத்தமன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில, தமிழகம் முழுவதும் பணியாற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களை விசாரணை ஏதுமின்றி பணியிடை நீக்கம் செய்வதையும், பணிமாறுதல் செய்வதையும் கைவிடக்கோரியும், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மட்டும் எவ்வித பதவி உயர்வும் வழங்கப்படாமல் புறக்கணித்து வருவதை கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரியும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமையாசிரியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment