ஈரோடு : தந்தை , மகளை கட்டிப்போட்டு திருட்டு ! - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 September 2024

ஈரோடு : தந்தை , மகளை கட்டிப்போட்டு திருட்டு !


ஈரோடு மாவட்டம் , அர்த்தநாரிபாளையத்தை சேர்ந்த தம்பதி விஸ்வநாதன் , சின்னம்மாள் , இவர்களுக்கு கோகுல கிருஷ்ணன் மற்றும் மகள் ரம்யா உள்ளனர் . மகளுக்கான திருமண பத்திரிகையை குலதெய்வ கோவிலில் , வைத்து சிவாமி தரிசனம் செய்ய தாயுடன் கோகுல கிருஷ்ணன் நேற்று ( செப் .8 ) கோவிலுக்கு சென்றார் . வீட்டில் விஸ்வநாதன் , ரம்யா இருந்தனர் .

இந்நிலையில் முகமூடி அணிந்த மூவர் , 11:00 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்து , தந்தை , மகளை கத்தியை காட்டி மிரட்டி , கட்டிப் போட்டனர் . பின் , பீரோவில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர் . கோவிலுக்கு சென்ற கோகுலகிருஷ்ணன் , தாயுடன் வீடு திரும்பி , வீட்டுக்குள் சென்றபோது தந்தை , சகோதரி கட்டிப்போடப்பட்ட நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் . இருவரும் நடந்த சம்பவங்களை கூறினர் .

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . திருமண செலவுக்கு பணம் வைத்திருப்பதை தெரிந்தே சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment