நாகப்பட்டினம் மாவட்டம் , வடகளத்தூர் முதலியார் வீதியைச் சேர்ந்தவர் தனபால் ( 59 ) . இவருக்கு மாலா ( 50 ) என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர் . தனபால் , தனது மனைவி மாலாவிடம் கோபித்துக் கொண்டு கடந்த 2021 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி பெருந்துறையில் தங்கி வாட்ச்மேனாக பணிபுரிந்து வந்தார் . தன்னுடைய இருப்பிடம் குறித்து மனைவி மாலாவுக்கு தெரிவிக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது . இந்நிலையில் தனபால் கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டிலேயே இருந்ததாக தெரிகிறது . சம்பவ தினத்தன்று வீட்டில் தலை குப்புற விழுந்து கிடந்த தனபாலை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடலை திருப்பி பார்த்த போது தலையில் அடிபட்டு ரத்த காயத்துடன் அசைவற்றுக் கிடந்ததை பார்த்துள்ளனர் . அவரை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் .
இதையடுத்து வீட்டின் உரிமையாளர் தனபாலின் செல்போனில் மனைவி மாலாவின் தொலைபேசி எண்ணை தேடி கண்டுபிடித்து தகவல் சொன்னதன் அடிப்படையில் தனபாலின் சடலத்தை மாலா பெற்றுக் கொண்டார் . இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment