சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 3 பேருக்கு உடல் நலம் பாதிப்பு கருங்கல்பாளையத்தில் உள்ள ஓட்டல் தற்காலிகமாக மூடல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை ஈரோடு கருங்கல்பாளையம், ராஜாஜிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகர் (52). இவரின் மனைவி அமுதா (38). இவர்களது மகள் நீலாம்பரி (21). கருங்கல்பாளையத்தில் ஒரு சிக்கன் கடையில் சம்பவத்தன்று இரவு சிக்கன் ரைஸ் வாங்கி மூவரும் சாப்பிட்டுள்ளனர். மறுநாள் காலை மூவருக்கும் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்றனர். உடல்நிலை சரியாகாத நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சைக்குச் சேர்ந்தனர். மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி தங்க விக்னேஷ் உத்தரவின்பேரில் அலுவலர்கள் கேசவராஜ், செல்வன் மற்றும் அருண்குமார் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து மூவரும் சிக்கன் ரைஸ் வாங்கிச் சாப்பிட்ட ஓட்டலுக்குச் சென்று சோதனை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து அந்த ஓட்டல் தற்காலிகமாக மூடப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment