கொமாரபாளையம் ஊராட்சியில் மே தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 May 2022

கொமாரபாளையம் ஊராட்சியில் மே தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம்,  கொமாரபாளையம் ஊராட்சியில் தமிழக அரசின் ஆணைக்கிணங்க மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு  சிறப்பு கிராம சபா கூட்டம் அங்கன கவுண்டன் புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் எஸ். எம். சரவணன் பி.காம்., அவர்கள் தலைமை தாங்கினார்.

 

ஊராட்சி மன்ற துணை தலைவர் ரமேஷ் வரவேற்புரை ஆற்றினார் கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் சத்யாபழனிசாமி, கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோ, வளர்ச்சிக் குழு உறுப்பினர் ராசு, 1வது வார்டு உறுப்பினர் கே. பெரியசாமி,  இரண்டாவது வார்டு உறுப்பினர் குருநாதாள், 3-ஆவது வார்டு உறுப்பினர் ஆர் சாவித்திரி, 4-வது வார்டு உறுப்பினர் கதிரி, 5 வது  வார்டு உறுப்பினர் கே குமார்,  6வது வார்டு உறுப்பினர் வடிவேலு, 7வது வார்டு உறுப்பினர் ரத்தனா, 8-வது வார்டு உறுப்பினர் பி சுந்தரம், 9வது வார்டு உறுப்பினர் வசந்தி,  11வது வார்டு உறுப்பினர் விக்னேஷ்வரி, 12வது வார்டு உறுப்பினர் கே. கிருஷ்ணமூர்த்தி, மற்றும் கால்நடைத்துறை, மருத்துவத்துறை,  மீன்வளத்துறை,  அங்கன்வாடி பணியாளர்கள்,  தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு அந்தந்தத் துறைகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களைப் பற்றி எடுத்துரைத்தார்கள்.
சிறப்புப் பார்வையாளராக வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி மணிமாலா கி.ஊ, அவர்கள்,  ஊராட்சி செயலாளர் குமார் நன்றியுரை ஆற்றினார். கொமராபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment