வியாபாரி சங்கங்கள் சார்பாக வரி உயர்வை மறுபரிசீலனை செய்யக்கோரி சத்தியமங்கலம் நகராட்சி தலைவரிடம் மனு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 6 May 2022

வியாபாரி சங்கங்கள் சார்பாக வரி உயர்வை மறுபரிசீலனை செய்யக்கோரி சத்தியமங்கலம் நகராட்சி தலைவரிடம் மனு.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வியாபாரி சங்கங்கள் சார்பாக வரி உயர்வை  மறுபரிசீலனை செய்யக்கோரி சத்தியமங்கலம் நகராட்சி தலைவரிடம் மனு வழங்கப்பட்டது.


சத்தியமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட இருபத்தி ஏழு வார்டுகளில் வணிகப் பயன்பாடு வீடுகளுக்கு சொத்து வரி மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்ட வரி உள்ளிட்ட வரி இனங்கள் குறிப்பிட்ட சதவீதம் உயர்த்தி வசூலிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. 


25% முதல் நூறு சதவீதம் வரை வரை தேர்வு செய்து வசூலிக்கப்படும் என அறிவிப்பு வெளியானதால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அனைத்து வணிகர் சங்கம் மற்றும் நகை வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் சொத்து சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்து ஏற்கனவே உள்ளபடி குறைய வரியை மட்டும் வசூலிக்க வேண்டும் என கோரி சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் திருமதி ஜானகி இராமசாமி அவர்களிடமும் சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளர் திரு சரவணகுமார் அவரிடமும் மனு அளித்தார்கள். இதுகுறித்து உயர் அதிகாரிகளுடன் பேசி வரி குறைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சத்தியமங்கலம் நகராட்சித் தலைவர் திருமதி.ஆர். ஜானகி ராமசாமி அவர்கள் உறுதி அளித்தார்.


இந்த நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்கத்தின் தலைவர் திரு ஜவஹர் அவர்களும் செயலாளர் சிவக்குமார் அவர்களும் பொருளாளர் நாகராஜ் அவர்களும் மற்றும் நகை வியாபாரிகள் சங்க நிர்வாகிகளும் பொதுமக்களும் உள்ளிட்டோர் பங்கேற்று கொண்டார்கள்.

No comments:

Post a Comment