கொல்லன் கோயில் பேரூராட்சி பகுதியில் இரண்டு ஆண்டுகளாக தனியார் பஸ் சரிவர வருவதில்லை; பொதுமக்கள் புகார். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 June 2022

கொல்லன் கோயில் பேரூராட்சி பகுதியில் இரண்டு ஆண்டுகளாக தனியார் பஸ் சரிவர வருவதில்லை; பொதுமக்கள் புகார்.

ஈரோடு மாவட்டம் ‌ கொல்லன்கோயில்  பேரூராட்சி உட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் பஸ் சரிவர வருவதில்லை. இந்த தகவலை முறையாக கொல்லன் கோயில் பேரூராட்சித் தலைவர் பூ சந்திரசேகர் மற்றும் நந்தகுமார் 2 மாதங்களுக்கு முன்பே ஈரோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பஸ் வரக் கோரி விண்ணப்பம் கொடுத்து வந்தோம், ஒரு சில நேரங்களில் பஸ்சை இயக்கிவிட்டு மற்ற நேரங்களில் இயக்குவதை ஒரு சில பேருந்துகள் தவிர்த்து வந்தனர்.


இன்று கொல்லன் கோயில் பேரூராட்சி தலைவர் சந்திரசேகர் துணைத் தலைவர் கிருஷ்ணகுமார் 13வது வார்டு உறுப்பினர் காமாட்சி சுந்தரம், 14வது வார்டு உறுப்பினர் மனோகரன், விநாயகர் டெக்ஸ் மேலாளர் டி கே இளங்கோவன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு முறையாக சென்று செல்லும் பாதை தாண்டாம்பாளையம் கந்தசாமி பாளையம் வழியாக செல்லாமல் நேர்வழியில் சென்ற தனியார் பஸ்சை நிறுத்தி. மேலே குறிப்பிட்டுள்ள பகுதிக்கு உள்ளே வந்து செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 


சிவகிரி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பஸ்கள் உள்ளே வந்து செல்லும் என்று வாக்குறுதி அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment