ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 June 2022

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இனிதே நடைபெற்றது, சங்கத்தின் தலைவர் திரு S.N.ஜவஹர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். 


சங்கத்தின் செயலாளர் திரு ச.மா.சிவகுமார் அவர்கள் சங்கத்தின் பொதுக்குழு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்ததற்கான காரணத்தையும் மேலும் கொரோனா கால சூழ்நிலையையும் கூறி கீழ்க்கண்ட தீர்மானங்களை விளக்கி உரையாற்றினார். 


கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

  1. சங்க அறக்கட்டளை சங்கத்திற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளையின் ஆவணத்தை முழுமையாக படித்து அறக்கட்டளை அமைக்கப்பட்டதற்க்கு சங்கத்தின் பொதுக் குழுவில் உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  2. சங்கத்தின் அறக்கட்டளைக்கு இடம் சங்க அறக்கட்டளையின் பெயரில் நகரத்தின் மையப்பகுதியில் அரிமா மஹால் பின்புறம் 5.33 சென்ட் விஸ்தீரணமுள்ள இடத்தினை வாங்கப்பட்டுள்ளதை தெரிவித்து சங்க உறுப்பினர்கள் அனைவரின் ஏகமனதான ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
  3. வணிகர் நல வாரியம் நமது சங்கத்தின் சார்பில் நடைபெற்ற வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்ப்பு முகாமில் வாரியத்தில் உறுப்பினராக சேர்ந்த உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களை தலைவர் S.N.ஜவஹர் அவர்கள் வழங்கினார், மேலும் அரசின் சார்பில் அடையாள அட்டை வழங்கியதும்  உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் என்பதையும் தெரிவிக்கப்பட்டது. 
  4. கொரோனா கால சங்கப் பணிகள் கொரோனா காலத்தில் சங்கத்தின் சார்பில் உறுப்பினர்களின் முழு பங்களிப்போடு நடைபெற்ற பல லட்சம் மதிப்புள்ள அனைத்து துறை நலத்திட்ட பணிகளை  அரசு துறை சார்ந்த  அதிகாரிகள் நன்றி தெரிவித்தார்கள் தொடர்ந்து நன்கொடை வழங்கிய அனைத்து உறுப்பினர்களுக்கும் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. 
  5. தற்காலிக கடைகள் சம்பந்தமாக வெளியூர்களில் இருக்கும் பெரும் நகை கடைகளின் தற்காலிக கடைகள் நமது நகரில் அமைத்து விற்பனை செய்ய முற்ப்பட்ட போது சத்தியமங்கலம் நகை வணிகர் அனைவரின் வேண்டுகோளுக்கு இணங்க நமது சங்க நிர்வாகிகள் தற்காலிக கடைகள் நடத்த முடியாமல் தடுத்தமைக்கு  சத்தியமங்கலம் நகை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் விஜய் ஜுவல்லரி உரிமையாளர் திரு விஜயராகவன் அவர்கள் நன்றி தெரிவித்தார் . 
  6. சங்கம் மற்றும் அறக்கட்டளை  வரவு-செலவுதாக்கல் வரவு-செலவு கணக்களை சங்க பொருளாளர் திரு. S.K.நாகராஜ் அவர்கள் தாக்கல் செய்தார் மேலும் கூட்ட முடிவில் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே முடிந்தது. 


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment