ஈரோடு மாவட்ட காவல் துறையின் சார்பாக சர்வதேச போதை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத போதைப் பொருட்கள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக இந்நாள் ஐ.நாவின் சர்வதேச தினமாக அனுசரிக்கப்படுகிறது.
கடந்த 1989 ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி முதல்கொண்டு இந்நாள் வரைக்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளை அனுசரிக்கும் விதமாக இருபத்தி ஏழு 2022 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 17 இடங்களில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் 20 இடங்களில் துண்டு பிரசுரம் விநியோகம் மற்றும் விழிப்புணர்வு நாடகம் போன்றவை நடத்தப்பட்டது.
இதில் போதைப் பொருள் பயன்பாட்டால் மனித சமுதாயத்துக்கு ஏற்படும் கேடுகள் குறித்தும் இது குறித்து விழிப்புணர்வு இல்லாத சமூகத்தில் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போதை பொருளுக்கு அடிமையாகி தங்கள் வாழ்வினை இழந்து வருவதை தடுக்கவும் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குதல் போன்ற முக்கிய குறிப்புகளுடன் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல்துறையினரால் நடத்தப்பட்டது.

No comments:
Post a Comment