சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 2 July 2022

சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.


ஈரோடு மாவட்ட காவல் துறையினரின் சார்பாக குற்ற விவாதிப்பு கூட்டம் மற்றும் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் தலைமையில் நடைபெற்றது. 


இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களும் மேலும் ஈரோடு மாவட்ட அனைத்து உட்கோட்ட காவல் உதவி மற்றும் துணை கண்காணிப்பாளர்களும் சிறப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர்களும் காவல் நிலைய காவல் ஆய்வாளர்களும் சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர்களும் இதில் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற கொலை கொள்ளை பாலியல் வன்முறை போன்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் குறித்தும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் சாலை விதிகளைப் பின்பற்றுவது பற்றியும் வாகன விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்கவும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் வலியுறுத்தப்பட்டது. 


மேலும் பல்வேறு வழக்குகளில் திறம்பட செயல்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்த 68 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு நேரில் சான்றிதழ் மற்றும் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் கண்டுபிடித்த காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு ஊக்கம் அளித்து பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment