ஆசனூரில் வனத்துறையை கண்டித்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 1 July 2022

ஆசனூரில் வனத்துறையை கண்டித்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள தாளவாடி அருகே ஒசூர் பகுதியில் பிடிபட்ட சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். தகவல் கிடைத்ததும் தாளவாடி தினத்தந்தி நிருபரும், நியூஸ் தமிழ் சேனல் நிருபர் முருகானந்தம் நிருபர் இருவரும் இதை செய்திக்காக வீடீயோ மற்றும் போட்டோ எடுத்தனர். 


அங்கு இவர்கள் இருவரும் மட்டுமின்றி வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் என 20-க்கும் மேற்பட்டவர்கள் போட்டோ,  வீடீயோ எடுத்துக்கொண்டு இருந்துள்ளனர். ஆனால், அவர்களை எல்லாம் விட்டுவிட்டு இரு நிருபர்களிடம்,  அத்து மீறி Dfo தேவேந்திரகுமார்மீனா என்பவர் திடீரென நிருபர் முருகானந்தத்தின் கழுத்தில் கை வைத்தும், சர்ட் காலரை பிடித்து இழுத்தும் மிக கேவலமாக நடத்தி உள்ளார். மேலும், வனக்காப்பாளர் முகிலன் என்பவர் நிருபர் கணேஷின் ₹.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை கையில் இருந்து பறித்து கீழே போட்டு உடைத்துள்ளார். 


இது குறித்து ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்ட போது அப்படித்தான் செய்வோம் என்று பதில் கூறினர். வனத்துறையினரின் இச்செயலை கண்டித்து சத்தியமங்கலம், மற்றும் தாளவாடி தாலூக்கா பத்திரிக்கையாளர்கள் சார்பாக ஆசனூர் வனக்கோட்ட அலுவலகம் முன்புறம் ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. 


இதையடுத்து டிஎப்ஓ தேவேந்திரகுமார்மீனா விடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் செல்போனை உடைத்து சேதப்படுத்திய முகிலன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன்,    வனக்காப்பாளர் முகிலன் புதிய செல்போன் வாங்கித்தர உறுதி அளித்தார். 


மேலும், DFO தேவேந்திரகுமார் மீனா மீதான புகாரை, உயரதிகாரிகளுக்கு அனுப்புமாறு பத்திரிக்கையாளர்கள் தெரிவித்தார்கள். 


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment