தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் திருமதி. K. R. கலைவாணி விஜயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செயலாளர் திரு. A.P. முருகானந்தம் அவர்கள், தேசிய பொதுக்குழு உறுப்பினர் மற்றும் ஈரோடு வடக்கு மாவட்ட பார்வையாளர் திரு. N.P.பழனிச்சாமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் தினேஷ்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் மோகன்குமார், சித்திவிநாயகம் மற்றும் பொதுச் செயலாளர்கள் திரு. A.N.உத்தரசாமி, திரு.சரவணகுமார், திரு. சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில மாவட்ட மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர், நிறைவாக கோபி நகர தலைவர் திரு. ரம்யா முருகையன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162471

No comments:
Post a Comment