காலப்போக்கில் அவ்விடத்தில் குடியிருந்த குறவன் சமுதாய மக்கள் இறந்தும் மற்றும் போதிய வருமானம் இன்றி தவித்த தாழ்த்தபட்ட குறவன் மக்களின் இழிவு நிலையை பயன்படுத்தி ஆதிக்க வர்க்க சாதியினர் பணம் கொடுத்தும் மாற்று இடத்துக்கு செல்லும் சூழ்நிலையை உருவாக்கி விட்டனர்.
இதை பயன்படுத்தி ஆதிக்க சாதியினர் குறவன் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு ஒதுக்கிய இடத்தில் அருள்மிகு வீரமாத்தி அம்மன் கன்னிமார் ஆலயம் வைத்து சுமார் 60 - ஆண்டு காலமாக குறவன் சமுதாய மக்கள் வழிபட்டு வருகின்றனர் இந்த கோயில் நிலத்தை கையகப்படுத்தி போலி ஆவணம் தயாரித்து கையகப்படுத்தி விட்டனர்.
இது சம்பந்தமாக சுமார் 1- வருட காலமாக போராடியும் ஆதிக்க சாதியினரின் பணபலத்தையும் படைபலத்தையும் தாழ்த்தப்பட்ட குறவன் சமூதாய மக்களால் எதிர்க்க முடியவில்லை, குறவன் இன சமுதாய ஊர்மக்கள் அனைவரும் கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் , நேர்முக உதவியாளர், அந்தியூர் வட்டாட்சியரின் உதவியாளர் இடத்திலும் குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் குறிஞ்சி ப.சந்திரசேகரன் தலைமையில் நேரில் சந்தித்து நிலத்தை மீட்டு தர வேண்டி கோரிக்கை மனு வழங்கியபோது உடன் இக்கோவிலின் ஊர் பொதுமக்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

No comments:
Post a Comment