ஊராட்சி வார்டு உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 3 July 2022

ஊராட்சி வார்டு உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் உக்கரம் ஊராட்சி 4 வது வார்டு உறுப்பினர். இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலுக்கு 4வது வார்டில் ஐந்து நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்கள். 


நேற்று வரை வேட்புமனு வாபஸ் பெற அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும், சத்தி திமுக தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் கே. சி. பி. இளங்கோ,  உக்கரம் ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன், ஊராட்சி மன்ற துணை தலைவர் புனிதா, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் சம்பத் குமார், சரோஜா செந்தில்குமார் ஆகியோர் வேட்பாளர் இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தியதில் போட்டி வேட்பாளர்கள் 4பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றார்கள். 


எனவே பாப்பாள் போட்டியின்றி 4வது வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதன்  தொடர்ச்சியாக தேர்தல் நடத்தும் அலுவலர் பிரேம்குமார் வேட்பாளர் பாப்பா ளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கினார். 


மேலும் திமுக வினர் பாப்பா ளுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

No comments:

Post a Comment