ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கொமராபாளையம் ஊராட்சி வீடுதோறும் குடிநீர் வழங்கிய ஊராட்சி என்ற நிலையை எய்தியமைக்கு கொமராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம் சரவணனுக்கு தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணண்னுண்ணி இ.ஆ.ப. , கூடுதல் ஆட்சியர் மதுபாலன் இ.ஆ.ப. , உதவி இயக்குநர் ஊராட்சிகள் சூரியா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162471.

No comments:
Post a Comment