ஈரோட்டில் சிறுவர் சிறுமிகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு அழகு பார்க்கும் பெற்றோர்கள். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 18 August 2022

ஈரோட்டில் சிறுவர் சிறுமிகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு அழகு பார்க்கும் பெற்றோர்கள்.

நாளை கொண்டாடப்பட இருக்கும் கோகுலாஷ்டமி பண்டிகை முன்னிட்டு சிறுவர் சிறுமிகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிவித்து கொண்டாடி வருகின்றனர், இந்நிலையில் இன்று (18/08/2022) ஈரோடு மாவட்டம் திண்டலில் உள்ள ஏ.இ.டி.(A.E.T) மழலையர் பள்ளியில் கோகுலாஷ்டமி பண்டிகை வரவேற்கும் விதமாக  சிறுவர்களுக்கு இன்று கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து கோகுலாஷ்டமி பண்டிகையைக் கொண்டாடப்பட்டது.

இப்பண்டிகை கிருஷ்ணர் ஆவணி மாதம் அஷ்டமி திருநாளில் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார் ... அதனால் நாளை நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது ... இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் கோயில்களில் குழந்தைகளுக்கு வேடமணிந்து பெற்றோர்கள் அழகு பார்த்து பண்டிகையைக் கோலாகலமாக கொண்டாடுகின்றனர் .

 

- தமிழக குரல் செய்திகளுக்காக செய்தியாளர் சக்திவேல் மற்றும் ஒளிப்பதிவாளர்  சிலம்பரசன்.

No comments:

Post a Comment