ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு மாநில 13வயதுக்குட்பட்ட சதுரங்க போட்டியில் 440 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் E.திருமகன் ஈவெரா அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பரிசுகளை வழங்கினார். இப்போட்டியை தமிழ்நாடு சதுரங்க மாநில துணை செயலாளர் திரு.விஜயராகவன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.
முன்னிலை வகித்தவர்கள் சூர்யா பொறியியல் கல்லூரியின் சேர்மன் ஆண்டவர் ராமசாமி, சூர்யா கல்லூரியின் தாளாளர் திரு.கலைச்செல்வன் அவர்கள், கல்லூரியின் முதல்வர் டாக்டர் மனோகரன் வரவேற்புரையாற்றினார்.
ஈரோடு மாவட்ட சதுரங்க சர்க்கிள் செயலாளர் ரமேஷ் அவர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். தமிழ்நாடு மாநில சதுரங்க கழகத்துடைய துணை செயலாளர் M.செந்தில் வேலு அவர்கள் சிறப்பு விருந்தனராக கலந்துகொண்டார்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment