272 குடிசை மாற்று அடுக்குமாடி குடியிருப்புகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 6 September 2022

272 குடிசை மாற்று அடுக்குமாடி குடியிருப்புகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி.

ஈரோடு மாவட்டம்,  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்கல்பாளையம் திட்டப்பகுதியில் கட்டுப்பட்டுள்ள 272 குடிசை மாற்று அடுக்குமாடி குடியிருப்புகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி  தலைமையில் நடைபெற்றது. 

மேலும் இந்த நிகழ்வில் ராஜ்சபா உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ்,  ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இ.திருமகன் ஈவெரா  பயனாளிகளுக்கு ஒப்படைத்தனர். ஈரோடுமாவட்ட ஆட்சியர் ஹெச். கிருஷ்ணனுண்ணி, ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், மாநகராட்சி  துணை மேயர் வி.செல்வராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



- தமிழக குரல் இணையதள  செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம்  சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment