ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு அளித்தனர். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 5 September 2022

ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் இன்று கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு அளித்தனர். கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் அளித்த மனுவில் கடந்த பல ஆண்டுகாலமாக எங்களுக்கு 1000 ரூபாய் மட்டுமே மாதாந்திர உதவித்தொகை தமிழக அரசால்  வழங்கப்பட்டு வருகிறது ஆனால் அண்டைய மாநில அரசுகள் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ 1600 முதல் ரூ 3500 வழங்கி வருகின்றன.


எங்களுக்கு 1000 ரூபாய்  தமிழக அரசால் வழங்கப்படக்கூடிய மாதாந்திர உதவித்தொகை ஒரு மனிதன் தன்னை பராமரித்துக் கொள்வது என்பது நடைமுறைக்கு இயலாதது அதனால் எங்களுக்கு மாதாந்திர உதவித் தொகையை 1000 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாக உயர்த்தித்தர வேண்டும் என்று எமது இயக்கம் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறது.


அக்கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாததால் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் எங்களுக்கு மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி தரக்கோரி மனு அளிக்கிறோம் என்று கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கூறுகின்றனர்.

 

- தமிழக குரல்  செய்திகளுக்காக ஈரோடு  செய்தியாளர் ச.சக்திவேல் மற்றும் ஒளிப்பதிவாளர். பி. சிலம்பரசன். 

No comments:

Post a Comment