இதனால் இந்த வாரம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க வருபவர்களை தீவிர சோதனைக்குப் பிறகே மனுகொடுக்க உள்ளே செல்ல காவல்துறையினர் அனுமதித்தனர், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பெண்கள் மனு கொடுக்க வந்தால் இவர்களுக்கென தனி அறை ஒதுக்கி பெண் காவலரை வைத்து தீவிர சோதனை செய்த பின்பு மனு கொடுக்க அனுமதித்தனர் அதுமட்டுமல்லாமல் ஆண்கள் மனுகொடுக்க வந்தால் அவர்களையும் தீவிர சோதனை செய்த பின்பே மனு கொடுக்க அனுமதித்தார்கள்.
குறிப்பாக அவர்கள் கொண்டுவரும் பைகளை முழுவதுமாக சோதனை செய்து அவர்கள் எதற்கு வந்திருக்கிறீர்கள் என்று தீவிர விசாரணைக்குப் பின்பே மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க உள்ளே செல்ல காவல்துறையினர் அனுமதித்தார்கள் .
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் ச. சக்திவேல் மற்றும் ஒளிப்பதிவாளர் .பி. சிலம்பரசன்.


No comments:
Post a Comment