மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் திரு சு. முத்துசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா. சுப்பிரமணியன் அவர்கள், ஆகியோர் (30/10/2022) பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் பர்கூர் ஊராட்சி தாமரைக்கரையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் மலைப்பகுதி கிராமங்களுக்கு புதிய 108 அவசர ஊர்தி சேவையினை கொடியசைத்து துவங்கி வைத்தார்கள்.

உடன் மாவட்ட ஆட்சியர் திரு எச். கிருஷ்ணணுண்ணி, மாநிலங்களவை உறுப்பினர் திரு. அந்தியூர் பா. செல்வராஜ் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஜி வெங்கடாசலம்,மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் திருமதி.க. நவமணி கந்தசாமி, இயக்குனர் புது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மரு.டி.எஸ். செல்வ விநாயகம், இணை இயக்குனர்கள் (தாய் செய் நலம் சென்னை) ம.ரு.நிர்மல்சன்(தடுப்பூசிகள் திட்டம்)ம.ரு வினய், துணை இயக்குனர் சுகாதார பணிகள் ம.ரு. சவுண்டம்மாள் உட்பட பலர் உள்ளனர்.

No comments:
Post a Comment