நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்து மருத்துவ கல்லூரியில் இணைந்த இரட்டையர்கள். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 October 2022

நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்து மருத்துவ கல்லூரியில் இணைந்த இரட்டையர்கள்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள கொண்டையம் பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி, அவருடைய மனைவி புவனேஸ்வரி இவர்களின் இரட்டை குழந்தைகளான ராகுல்-கோகுல் ஆகியோர் பங்களாபுதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறு முதல் பிளஸ்-2 வரை படித்தனர். 

மருத்துவ படிப்பு படிக்க விரும்பிய அவர்கள் நீட் தேர்வை முதலில் எழுதிய போது இவர்கள் மதிப்பெண்கள் குறைவாக பெற்று இருந்தனர். இதை தொடர்ந்து, இந்த மாணவர்களுக்கு தேவையான உதவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜ் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் செய்தனர்.


அதைத் தொடர்ந்து கடின பயிற்சி பெற்ற இந்த இரட்டையர்கள் நீட் தேர்வை எழுதினர். இதில் ராகுல் 466 மதிப்பெண்களை பெற்று மாநிலத்தில் ஐந்தாவது இடத்தையும் கோகுல் 372 மதிப்பெண்கள் பெற்று 48வது இடத்தையும் பெற்று அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பிற்கு தேர்வு பெற்றனர். 


மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில், ராகுல் சென்னை மருத்துவக் கல்லூரியையும் கோகுல் ஸ்டான்லி மருத்துவ கல்லூரியையும் தேர்வு செய்துள்ளனர். இவர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு ஆகும் கல்வி செலவினங்கள் மற்றும் உதவிகளை ஈரோடு வடக்கு மாவட்டம் டி.என்.பாளையம் ஒன்றிய திமுக சார்பில் ஏற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டது .


இதைத் தொடர்ந்து, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் டி .என் .பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன் ஆகியோர் மாணவர்களின் இல்லத்திற்கு சென்று மாணவர்களை பாராட்டி சால்வை அணிவித்தனர். தொடர்ந்து மாணவர்களின் படிப்புக்கு தேவைப்படும் இரண்டு செல்போன்களை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்தனர். இந்த மாணவர்கள் ஐந்து ஆண்டுகள் படித்து முடிக்கும் வரை ஆகும் அனைத்து உதவிகளையும் டி.என்.பாளையம் ஒன்றிய தி.மு.க செய்யும் என்று மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் உறுதியளித்தனர்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுக்கா செய்தியாளர் அஜித்.

No comments:

Post a Comment