ஈரோடு மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட குலவிளக்கு ஊராட்சி, கோவில்பாளையம், பழனியாண்டவர் குன்றில் வசிக்கும் பொன்னுசாமி என்பவரது வீட்டில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தினால் வீட்டில் உள்ள பொருட்களும், மாணவியின் மடிக்கணினியும் தீயில் கருகியது. சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி சரஸ்வதி அவர்களின் முயற்சியால் அறம் அறக்கட்டளையின் சார்பாக அதன் நிர்வாக இயக்குனர் திருமதி.கிருத்திகா ஷிவ்குமார் மாணவிக்கு மடிக்கணினி வழங்கினார்கள்.
இந்த நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் மொடக்குறிச்சி தெற்கு மண்டல் தலைவர் டெக்கான் பிரகாஷ், பட்டியல் அணி மாநிலச் செயலாளர் அய்யாசாமி, மாவட்ட தலைவர் சக்திவேல், மாவட்ட பொதுச் செயலாளர் மாதேஸ்வரன், மண்டல் பொதுச் செயலாளர் ரஞ்சித் குமார், மண்டல் துணைத்தலைவர் சங்கர் மற்றும் சந்தானம், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment