ஈரோடு மாவட்டம் சென்னிமலை ரோடு பெருமாள் காடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் பெயின்டர் தொழில் செய்து வருகிறார், இவருடைய மனைவி புவனேஸ்வரி இவர்களுக்கு (7 வயதில்) ஒரு மகள் உள்ளார் சதீஷ்குமார் வியாழக்கிழமை மாலை தனது சொந்த வேலை காரணமாக ஈரோடு காவிரி ரோட்டில் சென்றுகொண்டிருந்த ஓங்கு காளியம்மன் கோவில் அருகில் சென்றபொழுது அவ்வழியாக வந்த லாரி இவருடைய மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
மோதியதில் இவர் நிலை தடுமாறி சதீஷ்குமார் கீழே விழுந்தார் அப்போது லாரியின் பின்சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கியதில் அவர் தலை நசுங்கி பரிதாபமாக இறந்துவிட்டார், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்தாமல் தப்பித்து அங்கிருந்து சென்றுவிட்டார், விபத்தைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலைக் கேட்டு விரைந்து வந்த காவலர்கள் சதீஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த விபத்து குறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்நிலையில் விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளைக் கொண்டு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment