ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், அரசூர் ஊராட்சி, குள்ளம்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் போனஸ் வழங்கும் விழா நடைபெற்றது. சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவரும், சத்தி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி.இளங்கோ கலந்துகொண்டு உறுப்பினர்களுக்கு போனஸ் வழங்கி சிறப்பித்தார்.
உடன் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர் பழனியம்மாள் அவிநாசியப்பன், அரசூர் ஊராட்சி துணைத்தலைவர் சரவணகுமார் மற்றும் திமுக நிர்வாகிகள் சசிகுமார், அசோகன், ராம்பிரகாஷ் , திமுக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment