மொடக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தின் சார்பாக நிலைய அலுவலர் சா.லெமர் தம்பையா அவர்கள் தலைமையில் 2022 ம்ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு தீ விபத்து இல்லா தீபாவளி என்று பிரச்சாரம் மற்றும் போலி ஒத்திகை பயிற்சி அரசு பள்ளிகளான கணபதிபாளையம் மொடக்குறிச்சி சாவடிப்பாளையம் புதூர் நஞ்சை ஊத்துக்குளி லக்காபுரம் ஆகிய பள்ளிகளில் விழிப்புணர்வு நடைபெற்றது மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையம் சார்பாக விபத்தை தவிர்ப்போம் விழிப்புடன் இருப்போம் விபத்தில்லா தீபாவளி வீடுதோறும் மகிழ்ச்சியாக கொண்டாட விழிப்புணர்வு நோட்டீஸ் பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
பட்டாசுகளை தீபாவளிக்கு முன்னரும் பின்னரும் வீடுகளில் சேமித்து வைத்தல் கூடாது என்றும், பட்டாசுகளை பாதுகாப்பாக பெரியவர்கள் மேற்பார்வையில் தான் தான் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும் என்னும் விழிப்புணர்வை மக்களுக்கும், அனைத்து கடைகளுக்கும் மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையம் சார்பாக அறிவுறுத்தப்பட்டது.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக சக்திவேல் ப.
No comments:
Post a Comment