ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், உக்கரம் ஊராட்சி மில்மேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியினை சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழுப் பெருந்தலைவரும், சத்தி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி.இளங்கோ பார்வையிட்டார்.

உடன் உக்கரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகேஷ், ஒன்றிய குழு உறுப்பினர் சம்பத்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்(வஊ) சுப்பிரமணியம், வட்டார வளர்ச்சி அலுவலர்(கிஊ) பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment