ஈரோடு பூந்துறை நாதகவுண்டம்பாளையம் கருணாலயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் பயின்று வரும் முப்பத்தி ஐந்து மாணவர்களுக்கு தீபாவளி திருநாளை சிறப்பாக கொண்டாட டாக்டர் பாலசுப்ரமணியம், காங்கேயம் சுகுமார் தங்கராஜ், தனலட்சுமி லோகநாதன் ஆகிய மூன்று குடும்பங்கள் ஒன்றிணைந்து மாணவ மாணவியருக்கு இனிப்புகளும், அசைவ விருந்து கொடுக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு வினாடி வினா நிகழ்ச்சியை விஜயலட்சுமி, தாரணி, சாரா கல்லூரி துணை முதல்வர் தவமணி அவர்கள் சேர்ந்து கலை நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சி நடைபெற்றது.
கருணாலயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை மிக சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் விடுதியின் பொறுப்பாளர் ஆறுமுகம் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
- தமிழக குரல் இணையதள செய்தியாளர் பூபாலன்

No comments:
Post a Comment