நடைபெற்ற நிகழ்வில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் திரு.அ. கணேசன் மூர்த்தி அவர்கள் மற்றும் நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் கலந்துகொண்டு 796 பயனாளிகளுக்கு ரூபாய் 82 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேருரை ஆற்றினார்கள்.
விழா மேடை எதிர்புறம் பொது சுகாதாரத் துறை, வருவாய் பேரிடர் மேலாண்மை துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலை பயிர் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட நலத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, பள்ளி கல்வித்துறை ஆகிய துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை நமது சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் உள்ள ஒவ்வொரு துறை இயக்குனர்கள் அந்தந்த துறை சம்பந்தப்பட்ட நலத்திட்டங்கள் என்னென்ன என்பது பற்றியும் எவ்வாறு மக்கள் பயன்பெற வேண்டும் என்பது பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷனி சந்திரா, ஈரோடு கோட்டாட்சியர் சதீஷ்குமார், மக்கள் தொடர்பு அதிகாரி செந்தில்குமார் ஆகியோர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களுக்கு சென்றடைய வேண்டிய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்கள்.
நிகழ்வில் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நலத் திட்டங்கள் பற்றியும், திட்டங்கள் அரசு அதிகாரிகள் மூலம் மக்களை சென்றடையும் வழிகள் பற்றியும், மக்களின் கோரிக்கைகளை அரசிற்கு எவ்வாறு கொண்டு செல்வது பற்றியும், வேலைவாய்ப்புத்துறை மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து வளர்ச்சித் துறை பற்றியும், உழவர்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள செயலினை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்துமாறும் மற்றும் அரசு மக்களுக்கு வழங்கி வரும் நலத்திட்டங்கள் பற்றியும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளும் கொடுமுடி வட்டாட்சியர் மாசிலாமணி சிறப்பான முறையில் செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் முடிவில் எழுநூத்திமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் அவர்கள் நன்றியுரை கூறினார். இவ்விழாவில் கொடுமுடி மண்டல துணை தாசில்தார் பரமசிவம், தலைமை இடத்து துணை வட்டாட்சியர் முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மநாபன், சாந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள், உள்ளூர் அனைத்து கட்சி பிரமுகர்கள், பயனாளிகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment