கொளாநல்லி கருங்காடு காமாட்சியம்மன் கோவிலில் திருட்டு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 12 October 2022

கொளாநல்லி கருங்காடு காமாட்சியம்மன் கோவிலில் திருட்டு.

ஈரோடு கொடுமுடி வட்டம் கொளாநல்லி கருங் கரட்டில்  ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் மனோகரன் (63) என்பவர் கோயில் தர்மகர்த்தாவாக உள்ளார். 


நேற்று இரவு மர்ம நபர்கள் கோவில் கதவில் உள்ள பூட்டை உடைத்து உள்ளே சென்று சுவாமியின் கழுத்திலிருந்த ஒரு பவுன் தங்க நகை மற்றும்  உண்டியலை உடைத்து பணம் மற்றும் நகையை திருடி  விட்டனர்.


இத்தகவல் அறிந்து மலையம்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் அவர்கள்  ஈரோடு விரல்ரேகை  நிபுணர்  வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர். விரல் ரேகை தடயங்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை.


பின்பு மோப்பநாய் வீரா  வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த கோவிலை ஒரு முறை வலம் வந்து கரூர், ஈரோடு சாலையில் ஒரு கிலோ மீட்டர் சென்று கொளாநல்லி 4ரோடு  பேருந்து நிறுத்தத்தில் வீரா நின்றுவிட்டது. மலையம்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறார். 

No comments:

Post a Comment