கலைத் திருவிழா போட்டிகள் வகுப்பு வாரியாக 6-8,/9 மற்றும் 10,/11 மற்றும் 12 என மூன்று பிரிவில் மொத்தம் 2000 மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர்.
நடைபெற்ற இடங்கள் கோபி சாரதா மெட்ரிக் பள்ளி கலைத் திருவிழாவில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை சுமார் 1400 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மேற்கண்ட மாணவர்கள் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 33 பள்ளிகளிலிருந்து மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

போட்டிகளில் முதல் தகுதியை பெற்ற மாணவர்-தனி நபர் மற்றும் குழுவாக வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட அளவில் கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்க தகுதியுடைவராவர். இதற்காக வட்டார அளவில் அமைக்கப்பட்டுள்ள அமைப்புக்குழுவில் - வட்டார கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்கள், மக்கள் பிரதிநிதி, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
அமைப்புக்குழு முன்னிலையில் கலை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது. கவின் கலை /நுண்கலை / இசை வாய்ப்பாடு / கருவி இசை / நடனம் / நாடகம் / மொழித்திறன் போன்ற ஆறு வகைகளில் இடம்பெறும் 36 இனங்கள் வாரியாக போட்டிகள் நடைபெற்றன.
- மாவட்ட செய்தியாளர் என். நரசிம்மமூர்த்தி.

No comments:
Post a Comment