ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் உங்கள் இல்லங்களில் உங்களை சந்தித்து உங்களது கோரிக்கை மற்றும் உங்களது பகுதியில் உள்ள பிரச்சனைகளை உங்களுடன் இணைந்து அறிந்திடவும் தீர்வு காணவும் உங்கள் இல்லம் தேடி வருகிறேன் திட்டத்தின் கீழ் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி டிஎன் பாளையம் ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சியில் சுண்டக்கரடு, பகவதி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களை அவர்களது இல்லங்களில் நேரில் சந்தித்து அவர்களது குறைகளை அறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விரைந்து அந்தப் பணிகளை நிறைவேற்றித் தரும்படி அறிவுறுத்தினார்.

உடன் ஒன்றிய கழக செயலாளர் சிவபாலன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியம், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் முருகேஷ் சஞ்சீவி மற்றும் கழக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் என்.நரசிம்ம மூர்த்தி.

No comments:
Post a Comment