தமிழ்நாடு அரசு பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின், அவர்களின் அறிவுறுத்தலின்படி ஞாயிற்றுக்கிழமை (27/11/2022) சென்னையில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா மினி மாரத்தான் 05 கிலோமீட்டர் தூரம் கொண்ட ஓட்டம் பந்தயம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறை நூற்றாண்டு விழா முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி காலை 6 மணி அளவில் ஈரோடு மாவட்டம் வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் போட்டி நடைபெற்றது இப்போ போட்டியில் சுமார் 100க்கும் மேல் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலரும் கலந்து கொண்டனர், இப்போட்டி வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் துவங்கி மேட்டூர் ரோடு, அரசு மருத்துவமனை ரவுண்டானம், பெருந்துறை ரோடு, வழியாக காளிங்ராயன் பயணியர் மாளிகை மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானா வரை சென்று மீண்டும் அதை சாலையில் வழியாக வ.உ.சி மைதானத்தில் மினி மாரத்தான் போட்டி முடிவடைந்தது.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு செய்தியாளர் ச.சக்திவேல் மற்றும் ஒளிப்பதிவாளர்.பி. சிலம்பரசன்.

No comments:
Post a Comment