ஈரோடு, சிவகிரி பேரூராட்சி பகுதியில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் 8 லட்சம் மதிப்பில் புதிய பொலிவுடன் அண்ணா கலையரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அண்ணா கலையரங்கத்தின் மேற்கூரை அமைக்கும் பணியினை ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ. கணேசமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்து அதில் சில மாற்றங்கள் செய்ய அறிவுரை வழங்கினார், ஆய்வின்போது மதிமுகமொடக்குறிச்சி ஒன்றியக் கழகச் செயலாளர் கோபு (எ) கோபால், தியாகி கொடிகாத்த குமரன் பேரவை தலைவர் சண்முகசுந்தரம் சிவகிரி பேரூர் கழகச் செயலாளர் நல்லசிவம், அவல்பூந்துறை பேரூர்கழகச் செயலாளர் லோகநாதன், முன்னாள் கவுன்சிலர்கள் நடராஜன், மீனாட்சி சுந்தரம், பேரூர் துணைச் செயலாளர் ஜீவானந்தம், முருகேசன், மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக பூபாலன்.

No comments:
Post a Comment